ETV Bharat / state

திமுக பயிற்சி பாசறைக் கூட்ட நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்.. துரைமுருகன் அறிவிப்பு - தீர்மானங்கள் நிறைவேற்றம்

DMK Polling agent Training Workshop at Tiruvallur: சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) பயிற்சி பாசறைக் கூட்டமானது நவம்பர் 5ஆம் தேதியன்று திருவள்ளூரில் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இறுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 1:50 PM IST

சென்னை: டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 4 மண்டலங்களைத் தொடர்ந்து, நிறைவாக திருவள்ளூரில் நவம்பர் 5ஆம் தேதியன்று சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) பயிற்சி பாசறைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்கண்ட தீர்மானங்களின்படி, கட்சியில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு கட்சி தலைமையால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது. திமுக தலைவரின் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்" நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்!

டெல்டாட மண்டல கூட்டம் ஜூலை 26 அன்று திருச்சியிலும் - தென்மண்டலக் கூட்டம் ஆகஸ்ட் 17 அன்று இராமநாதபுரத்திலும் - மேற்கு மண்டலக் கூட்டம் செப்டம்பர் 24 அன்று காங்கேயத்திலும் – வடக்கு மண்டலக் கூட்டம் அக்டோபர் 22 அன்று திருவண்ணாமலையிலும் என இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட கட்சியின் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு கொள்கை வழிகாட்டுதலும் - தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டு, 4 மண்டலங்களிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

நிறைவாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்", வருகிற நவம்பர் 5 அன்று திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் முதலமைச்சர் சிறப்புரையாற்றிட நடைபெற உள்ளது.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பின்வரும் 11 திமுக மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்கு உட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) கூட்டத்தைக் கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் வெடி விபத்து - என்ஐஏ சோதனை என தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.