சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலமின்மையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இத்தகவல் கிடைத்ததும் திமுக தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்ற சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
அதில், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வழக்கமான முதுகுவலி பரிசோதனை மேற்கொள்வதற்காக போரூரில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். தற்போது பரிசோதனை முடிவடைந்த நிலையில் சற்றுமுன் வீடு திரும்பியுள்ளார்’ எனத்தெரிவிக்கப்பட்டது.
இதனால் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் கைது; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்