ETV Bharat / state

தாயகம் திரும்பிய கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு..! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி... - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

cm stalin thanks to Union Minister of External Affairs  Union Minister of External Affairs  cm stalin  students return from ukraine  தாயகம் திரும்பிய கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி  உக்ரைன் மாணவர்கள்
கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு
author img

By

Published : Mar 12, 2022, 11:49 AM IST

சென்னை: உக்ரைன் ரஷ்யா போர் வெடிக்கத் தொடங்கிய நாள் முதல், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்நிலையில், உக்ரைனில் தவித்த தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்காக, திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி, ஜெசிந்தா, அஜய் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மாணவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மீட்கப்பட்ட மாணவர்கள்

இதனைத்தொடர்ந்து உக்ரைனில் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் உக்ரைனில் தவித்து வந்த கடைசி தமிழ்நாடு மாணவர்கள் குழு நேற்று டெல்லி வந்தடைந்தனர். மேலும் அவர்களை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலையில் மாணவர்கள் அனைவரும் விமானம் மூலமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். மாணவர்களுடன் மீட்புக்குழுவும் சென்னை வந்தடைந்தனர். தாயகம் திரும்பிய அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஸ்டாலின் நன்றி

இதையடுத்து உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழ்நாடு மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியனுக்கு, தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவர்களை வரவேற்ற ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.