ETV Bharat / state

“சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்” - ஸ்டாலின்

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Jacto Jeo conference  CM Stalin  CM Stalin said fulfilling  CM Stalin at Jacto Jeo conference  ஜாக்டோ ஜியோ  ஜாக்டோ ஜியோ மாநாடு  தமிழ்நாடு முதலமைச்சர்  முதலமைச்சர் மு க ஸ்டாலின்  ஸ்டாலின்  வாழ்வாதார நம்பிக்கை மாநாடு
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Sep 11, 2022, 7:25 AM IST

சென்னை: தீவுத் திடலில் நேற்று (செப் 10) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ, “வாழ்வாதார நம்பிக்கை” மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், “வாழ்வாதார நம்பிக்கை மாநாடு என்று இந்த மாநாட்டுக்கு பெயர் சூட்டியிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்ட அனைத்துமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவையே என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.

இந்த மாநாட்டுக்கு வரும்போதே, உங்களது கோரிக்கையை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். 15 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. 10 ஆண்டுகள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவோம். அதில் எந்தவித சந்தேகம் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

முதலாவதாக, அனைத்து வகையான, தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும், 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. அடுத்ததாக, பல்லாண்டுகளாக பணிமாறுதலின்றி இருக்கக்கூடிய பணியாளர்களுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப, இணைய வழியில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு, மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாணை எண். 101 வாயிலாக 18 மே 2018 அன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆசிரியர்கள், சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் இந்நிர்வாக முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மறு சீரமைப்பில் இருந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இதனைக் களைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அரசாணை எண்.151 வாயிலாக உரிய உத்தரவுகள், 9-9-2022 அன்று நான் பிறப்பித்திருக்கிறேன்.

இதன் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொடக்கக் கல்விக்கென மாவட்ட அளவிலான அலுவலர் பணியிடம் புதிதாகக் கிடைக்கப் பெறுவதுடன், தனியார் பள்ளிகளை நிருவகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளின் நீண்டநாள் கோரிக்கையான, ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு முடிந்துவிடப் போவது இல்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும். அரசின் நிதிநிலை சீராகச் சீராக மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து என்பது மிகப்பெரிய நலத்திட்டம். கோடிக்கணக்கான மகளிர் இதன் மூலம் பயனடைகிறார்கள். இருந்தாலும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1520 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கான சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1949 கோடி ஆண்டுக்கு செலவாகிறது.

இந்நிலையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், வருகிற அண்ணா பிறந்த நாள் 15-ஆம் தேதியில் இருந்து நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பவுனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக பல லட்சம் மக்கள் பயனடைகிறார்கள் என்று இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அரசின் வருவாய் சுருங்கிவிடவும் செய்கிறது.

அரசாங்கத்தின் கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்குப் பணத்தைச் சேர்க்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு அல்ல. நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணம் இருக்கவேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கிறதா என்றால் இல்லை. அதனை உருவாக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். அப்படி நிதிநிர்வாக மேலாண்மையை மிகச்சரியாக நிர்வகித்து வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களைவிட அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம்.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயில் 52.3 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் முன் வருகிறார்கள். இதன் மூலமாக மாநிலத்தில் முதலீடுகள் பெருகி, வளர்ச்சியும் பெருகி வருகிறது. இவை முழுமையான வளர்ச்சியாக மாறும்போது, அனைவரது ஆசையும் நிறைவேறும். அனைவரது கனவும் நிறைவேற்றப்படும். உங்களது குறைகள் எதுவாக இருந்தாலும், உங்களது துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள், உங்கள் நட்போடு அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். அவர்களிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்தால், உறுதியாக அது என்னுடைய கவனத்திற்கு அப்போதைக்கப்போது வந்து சேரும். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.

இந்த மாநாட்டிற்காக நாளேடுகளில், நீங்கள் அளித்திருக்கக்கூடிய விளம்பரத்தில் எங்கள் ஒற்றை நம்பிக்கையே என்று பாசத்தோடு குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உங்களுடைய நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது.

எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்காக, பல திட்டங்களைத் தீட்டி, உங்கள் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்களோ, அதை நானும் ஏற்றுக்கொண்டு அதனை எந்நாளும் காப்பாற்றுவேன். இதனை ஏதோ ஒரு முதலமைச்சராக இருந்து சொல்கிறேன் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. உங்களில் நானும் ஒருவன் என்ற இந்த நட்புணர்வோடு இந்த நேரத்தில் தெரிவித்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல பத்தாண்டுகளாக இந்த நாட்டிலே சீரழிந்து போயிருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

நிதிநிலைமை எந்த சூழலில் இருக்கிறது என்பதும் உங்களுக்குப் புரியும். இருந்தாலும், நாம் ஆட்சிக்கு வந்தபிறகு சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆகவே நீங்கள் சொன்னதை நிச்சயமாக, உறுதியாக, நான் தொடக்கத்திலே சொன்னேன். இந்த வெற்றி உங்களால் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சியை உருவாக்கியிருக்கக்கூடிய உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் பக்கபலமாக இருப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்’ - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.