சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே துறையாக ''முதல்வரின் முகவரி" என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வரின் முகவரித்துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தற்போதைய நிலையில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறித்தும், மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள், முதலமைச்சரின் முகவரி சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம்