ETV Bharat / state

மழை வெள்ள பாதிப்பு: காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஸ்டாலின் ஆய்வு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மழை வெள்ள பாதிப்பு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு

author img

By

Published : Nov 12, 2021, 3:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திரா-சென்னைக்கு இடையே நேற்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். ஸ்டாலின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து, மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார்.

மழை வெள்ள பாதிப்பு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு

அந்தவகையில், இன்று (நவ. 12) காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் ஆய்வுசெய்தார்.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். வண்டலூர் அடுத்த மாம்பாக்கம் நிவாரண முகாம், ஆதனூர் அடையாறு, முடிச்சூர் நிவாரண முகாம், முடிச்சூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி உள்ளிட்டவைகளை ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Kodanad Case - ஈபிஎஸ்,சசிகலாவை விசாரிக்கக்கோரிய மனு:பதிலளிக்க அவகாசம் கேட்ட காவல் துறை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.