ETV Bharat / state

டெல்லி புறப்படும் முதலமைச்சர்... - டெல்லி புறப்படும் முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார்.

CM Stalin going to delhi  Stalin going to delhi  stalin delhi visit  டெல்லி புறப்படும் முதலமைச்சர்  ஸ்டாலின் டெல்லி பயணம்
டெல்லி புறப்படும் முதலமைச்சர்
author img

By

Published : Mar 30, 2022, 2:18 PM IST

சென்னை: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் நாளை (மார்ச் 31) பிற்பகல், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார். மேலும், ஏப்ரல் 2ஆம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை (மார்ச் 31) மாலை, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். மேலும் ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களை சந்திக்கிறார்.

பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி, திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அன்று இரவு டெல்லியிலிருந்து சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. அடுத்த பயணம் புதுடெல்லியை நோக்கி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.