தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றன.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய அனுமதித்தால் தனது தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்ப தயார் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்நிலையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் பதில்
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியவில்லை என தெரிவித்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கூட்டத் தொடர் நடைபெறும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், காவலர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என ஸ்டாலின் பதிலளித்தார்.
இதையும் படிங்க : கோடநாடு விவகாரம் - முதலமைச்சர் Vs எதிர்க்கட்சி தலைவர்