ETV Bharat / state

‘பாரதிய’ பெயர் மாற்றம்: இது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! - மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சட்டங்களின் பெயர் மாற்ற மசோதா, இந்தியாவின் ஒற்றுமையை சீரழிக்கும் செயல் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin
மு.க ஸ்டாலின்
author img

By

Published : Aug 12, 2023, 7:59 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று (ஆகஸ்ட் 11) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வழக்குகள் பதிவு செய்யும் முறை மற்றும் விசாரணை முறை உள்ளிட்டவைகளில் மாற்றம் கொண்டு வரும் அளவிற்கு மக்களவையில் 3 சட்டத் திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

IPC, CPC மற்றும் இந்திய ஆதார சட்டம் இவைகளை பாரதிய நியாய சங்ஹித், பாரதிய சக்‌ஷியா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்யபடவுள்ளது. இதில் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநிலங்களைவில் தாக்கல் செய்யபட வேண்டும். ஆனால், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று தாக்கல் செய்யபட்டதால் அடுத்த கூட்டத்தொடரில் இது குறித்தான விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: himachal Accident: இமாச்சலப் பிரதேச சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், இந்த சட்டம் குறித்து ஆரம்ப கட்டத்திலேயே தனது எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்திருந்தது. இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக கொண்டு வரப்படும் சட்டத்தில் 'இந்திய' என குறிப்பிட்டுள்ளதை 'பாரதிய' என மாற்றம் செய்யும் மசோதாவிற்கு தனது கண்டனங்கள் எனவும், 'பாரதிய' என மாற்றம் செய்வது மத்திய அரசினுடைய இந்தி மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது எனவும், இத்தகைய செயல்பாடு இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும் எனவும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், “இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை. வரலாற்றின் பிழையில், தமிழகமும் திமுகவும் இத்தகைய அடக்குமுறை மேலோட்டங்களுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம், மீண்டும் அதைச் செய்வோம், தளராத உறுதியுடன்.

இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்” என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.