Online Gambling - சென்னை: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகவும், தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
சமீப நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றி வருகின்றன.
சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஜனவரி 5) ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றித்தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். 2003 காவல் நிலையம் சூதாட்ட சட்டத்தின் படி ஆலோசனை கேட்டு உள்ளோம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி சட்ட ஆலோசனைக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம், கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும்" என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல்!