ETV Bharat / state

வந்தார் ஸ்டாலின்: உழைப்பும், அனுபவமும் காரணம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்தது போல், கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுக உடையாமல் இருந்ததற்கும், திமுக இன்னமும் சுயமாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்ததற்கும் மு.க. ஸ்டாலின் மட்டும்தான் காரணம்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்
author img

By

Published : May 2, 2021, 5:52 PM IST

Updated : May 2, 2021, 8:03 PM IST

திமுக வட்டப் பொறுப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி அமைப்பாளர், இளைஞரணிச் செயலாளர், எம்.எல்.ஏ சென்னை மேயர், தளபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், திமுக பொருளாளர், செயல் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் என்று பல்வேறு பதவிகளைக் கடந்த ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் நாற்காலியில்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

”மு.க. ஸ்டாலினாகிய நான்” என்று அவர் சொல்வதைக் கேட்பதற்காக ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் இத்தனை நாள்கள் காத்திருந்தனர். கருணாநிதி இருந்தவரை முதலமைச்சர் இடத்தில் ஸ்டாலினை வைத்துப் பார்க்க ஒரு தரப்பினர் விரும்பவில்லை.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

ஆனால், இப்போது ஸ்டாலினை விட்டால் ஆளில்லை என்று அனைவரும் பெரும்பாலும் ஒப்புக்கொண்டுள்ளனர். காரணம், கருணாநிதி கூறியதுபோல் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை, தேர்தல் நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவர் தொடங்கிவிட்டார். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையையும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை பொறுத்தவரை களத்திற்கு அவர் வந்து மைக் பிடிப்பதற்கு முன்பே மக்களின் பல்ஸை சமூக வலைதளங்கள் மூலம் பிடித்துவிட்டார். குறிப்பாக, ஒன்றிணைவோம் வா என்று செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

அதேபோல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் அவர் மக்களின் அருகில் சென்றுவிட்டார். இப்படி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், அவரின் அரசியல் அனுபவத்தை காண்பித்தது.

கட்சி ரீதியில் ஆளுமைமிக்க தலைவர் என்று அவர் தன்னை நிறுவிவிட்டார். முதல் முறை இப்போது தமிழ்நாட்டை ஆளப்போகிறார். ஆட்சியாளராக அவர் தன்னை சிறந்த ஆளுமையாக நிறுவியே ஆக வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமிக்க திமுக, தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிற்கும்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

கரோனா காலத்தில் மக்களுக்காக திமுகவினரை செயல்பட வைத்தது, தமிழ்நாடு சுயாட்சி உரிமைக்கு ஆபத்து வந்த போது எதிர் குரலாக ஒலித்தது, சாமானியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த ஒவ்வொரு சட்டத்தையும் அறத்தோடு எதிர்த்தது என அவரது செயல்பாடுகள் அனைத்தும் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவரை கண் முன்னே நிறுத்தின.

வந்தார் ஸ்டாலின்: உழைப்பும், அனுபவமும் காரணம்

திமுகவின் கொள்கைக்கு அப்படியே நேர் மாறான கொள்கையைக் கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, மாநிலத்தின் பொறுப்பைக் கையில் வைத்திருக்கப்போகும் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாதங்களில் ஒன்று. ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

தங்களுக்கு உடன்படாத கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் பாஜகவின் அரசியல் விளையாட்டு அதகளமாக இருக்கிறது. அதனை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

முக்கியமாக தமிழ்நாட்டுக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தொடர்ந்து தகவல் வெளியாகிவரும் சூழலில் அந்தக் கடனை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரோனா பேரிடர் காலம் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்துக்கொண்டிருக்க அவர் எவ்வாறு செயல்படப்போகிறார் போன்ற பல கேள்விகள் உடன்பிறப்புகள் மத்தியில் மட்டும் இல்லாமல் அனைவரின் மனதிலும் இருக்கின்றன.

அதிமுகவின் பெரிய நெகட்டிவ் இமேஜுக்கு காரணம் அந்தக் கட்சிக்குள் நடந்த நாற்காலி சண்டை மட்டும் அல்ல, அந்த சண்டைக்கு பஞ்சாயத்துத் தலைவராக பாஜக வந்ததும்தான்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை திமுக - அதிமுக சண்டையோ, இல்லை இரண்டு கட்சிகளுக்குள் ஏதேனும் ஒரு கட்சிக்குள் நடக்கும் சண்டை என்பதோ, தங்கள் பங்காளிகளுக்குள் போட்டுக்கொள்ளும் சண்டை. ஆனால், உள்ளே வேறு யார் வந்தாலும் அவர்களை மட்டுமல்ல அவர்களை அழைத்து வந்தவர்களையும் மன்னிக்கமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

ஆளுங்கட்சியின் மோசமான செயல்பாட்டையும், பாஜகவின் எதேச்சதிகாரப் போக்கையும் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி எதிர்த்திருப்பாரோ, அதனை தேர்தல் நேரத்தில் எப்படி வீரியமாகப் பயன்படுத்தியிருப்பாரோ அதனைச் செய்தார் மு.க. ஸ்டாலின்.

கமல் ஹாசனும், சீமானும் தொடர்ந்து திமுகவை மட்டுமே டார்கெட் செய்ய ஸ்டாலினோ அவர்கள் இருவரையும் பற்றி பேசுவதைத் தவிர்த்தார். பெயரை ஸ்டாலின் என்று வைத்துக்கொண்டு கரைவேட்டி கட்டிய புத்தராகக் கடந்தார்.

அதேபோல், ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, குடும்ப அரசியல் செய்யும் கட்சி திமுக என்ற கறையை துடைக்க முயலவும் அவர் தவறவில்லை.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

முக்கியமாகக் கூட்டணிக் கணக்கு. அவரது தந்தை போட்ட கூட்டணிக் கணக்கு சென்ற தேர்தலில் தவறிப்போக, இந்தத் தேர்தலில் ஸ்டாலினின் கூட்டணிக் கணக்கும், கூட்டணி கட்சிகளுக்கு அவரது சீட் செட்டில்மெண்ட்டும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

கடந்த ஆட்சிக்காலத்தில், நில அபகரிப்பு, திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்த முனைந்தது, குடும்ப அரசியல் என ஏராளமானப் புகார்கள் எழுந்தன.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நிலங்களை எல்லாம் அபகரித்துவிடுவார்கள் என்று இந்தத் தேர்தலிலும் எதிர்த்தரப்பினர் சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. அது இந்த ஆட்சிக்காலத்திலும் தொடராமல் மு.க. ஸ்டாலின் தடுக்க வேண்டும்.

முதலமைச்சராக முதல்முறை மு.க. ஸ்டாலின் கோட்டைக்குள் நுழைகிறார். அவர் இப்படி நுழைவதற்கும், திமுகவின் இந்த வெற்றிக்கும் பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.

ஒருவர் எவ்வளவுதான் யோசனை கொடுத்தாலும் அதை செயல்படுத்தலாமா வேண்டாமா, அளிக்கப்பட்ட ஐடியாக்களை எப்படி, எங்கு, எந்த நேரத்தில் செயல்படுத்தலாம் என முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தலைவர் மட்டுமே. அப்படி முடிவெடுப்பதற்கு பரந்த பார்வையும், ஓயாத உழைப்பும், பெரிய அனுபவமும் வேண்டும். அது ஸ்டாலினுக்கு இருந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்தது போல், கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுக உடையாமல் இருந்ததற்கும், திமுக இன்னமும் சுயமாக மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்ததற்கும் மு.க. ஸ்டாலின் மட்டும்தான் காரணம்.

வந்தார் ஸ்டாலின்
வந்தார் ஸ்டாலின்

2016ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே, கருணாநிதிக்கு நெருக்கமானவர்களைவிட, ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுக்கே சீட் வழங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படாமல் இருக்க ஸ்டாலினின் ஆளுமையும், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் பெற்ற வெற்றியுமே காரணம்.

ஆக, முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கோட்டைக்குள் நுழைந்ததற்கு பிகே மட்டும் பிரதான காரணமில்லை மு.க. ஸ்டாலினின் உழைப்பும், அனுபவமும்தான்.

Last Updated : May 2, 2021, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.