ETV Bharat / state

'181'மகளிர் உதவி மையத்தின் மணல் சிற்பத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்!

தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

’181’மகளிர் உதவி மையத்தின் மணல் சிற்பத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்!

author img

By

Published : Dec 30, 2022, 4:54 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘181 மகளிர் உதவி மையம்’ பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன் மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் துறை, மருத்துவத்துறை, சட்ட உதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம். பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம். பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்” என்ற பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு பதாகையில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: Fact Check: முதல்வர் நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர்களா? நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.