ETV Bharat / state

தமிழகத்தின் வளர்ச்சி மாநிலத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவருக்கு புரியவில்லை - ஆளுநரை சாடிய முதலமைச்சர் - ஆர்என் ரவி

தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியின் மூலம் மக்களை குழப்பக்கூடிய வகையிலே தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 7, 2023, 8:07 AM IST

சென்னை: தேனாம்பேட்டை, விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், நேற்று (ஜூன் 6) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், முதற்கட்டமாக தலா 25 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 125 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ”நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை, குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு இரண்டு கண்களாக நினைத்து செயல்படுத்தி வருகிறோம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிகச் சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலே மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவருக்கு மட்டும் அது புலப்படவில்லை.

அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக் கூடிய வகையிலேயே அவர் செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றியெல்லாம் மக்கள் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள்.

அதையெல்லாம் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்து கொள்வார்கள். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதியிலிருந்து நாம் கொண்டாட தொடங்கி இருக்கிறோம்.

இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால், இந்த அரசே அவருடைய அரசு. ஐந்து முறை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து காட்டியிருக்கக் கூடியவர்.

அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நம்முடைய நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டு வரப்பட்டு, இன்றளவும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கருணாநிதியின் பாதையில்தான் நமது அரசின் நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இது நாள் வரையில் தொழில்துறை நிகழ்ச்சிகளில்தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதற்கு அடுத்தப்படியாக நான் அதிகமாகக் கலந்து கொண்டது மக்கள் நல்வாழ்வுத் துறை நிகழ்ச்சிகள்தான். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்தத் துறையில் பல முன்னேற்றங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எத்தகைய சூழலில் நாம் பொறுப்பேற்றோம் என்பது, உங்கள் (மக்கள்) அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கரோனா என்ற கொடிய தொற்று நோய், அந்த அலை தீவிரமாக இருந்த காலத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு அதனைக் கட்டுப்படுத்தினோம். ஆட்சிக்கு வந்த பிறகு நான் முதலமைச்சர் மற்றவர்கள் எல்லாம் துறையின் அமைச்சர்களாக பொறுப்பேற்று இருந்தாலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சராக இருந்தவர் மா.சுப்பிரமணியன்தான்.

ஆனால், மா.சுப்பிரமணியன் மட்டுமல்ல, முதலமைச்சர் உள்பட எல்லா அமைச்சர்களும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக மாறினோம். அதனால்தான் கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு பெரிய வெற்றியை பெற்றோம். அதற்கு நம்முடைய அதிகாரிகள் எந்த அளவிற்கு எல்லாம் துணை நின்றார்கள் என்பதை இன்றைக்கும் நான் எண்ணிப் பார்க்கின்றபோது மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் மூன்று மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளது. இதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். எவர் என்று உங்களுக்குத் தெரியும். பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாக மக்கள் நல்வாழ்வு விளங்கி வருவதுடன், தனிநபருக்கான சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும் நம் மாநில மருத்துவத் துறையின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது.

அந்த அடிப்படையில்தான் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும், 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை அனைவரும் போற்றுகிறார்கள். நான் அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றேன். அதைக்கூட இங்கே இருக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர் எப்படி விமர்சித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். முதலீட்டை ஈர்க்க போகவில்லை, முதலீடு செய்யப் போயிருக்கிறார் என்று சொல்கிறார். இது அவர் புத்தி. எனவே, அதைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் – 48’ திட்டத்தின் கீழ் சாலை விபத்துக்குள்ளானவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தாலும், 48 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும் ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடு மட்டும்தான். கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 18 முதல் முதல் நடப்பாண்டு மே 31 வரை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1 லட்சத்து 65 ஆயிரத்து 355 பேர், இந்தத் திட்டத்தின்கீழ் 145 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை பெற்று இன்னுயிர் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதற்கு வருகிற 15ஆம் தேதி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நல்வாழ்வுத் துறையானது மாரத்தான் ஓட்டம் போன்று மிகப் பெரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில்தான் மகத்தான திட்டமாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பான முறையான அறிவிப்பை, ‘கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்திருப்பதைப்போல நகர்ப்புறங்களில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க இருக்கிறோம்’ என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தேன்.

708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை, 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள மாநராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைத்திட உத்தரவிட்டேன். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பிற்கிணங்க அங்கு நகர்ப்புறங்களில் இயங்கி வரும் ‘மொகல்லா கிளினிக்’ எனப்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை நான் பார்வையிட்டேன். நம்முடைய துறையினுடைய அமைச்சரும், அதிகாரிகளும் வந்தார்கள்.

அப்போது, ஏற்கனவே தமிழ்நாட்டில் கிராமப்புற சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ள நாம், அதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என நினைத்தோம். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் உட்கட்டமைப்பு எற்படுத்துவதற்கான அனுமதி 2021 - 2022ஆம் ஆண்டு 593 மையங்களுக்கும், 2022 - 2023ஆம் ஆண்டு 115 மையங்களுக்கும் அளிக்கப்பட்டது.

இவற்றுக்கான கட்டடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இன்றைய நாள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 125 கோடி ரூபாய். இந்த மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டம்’ என்பது இந்தியாவுக்கே முன்னோடியான திட்டமாக அமையப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் மூலம் நகர்ப்புற மக்களுக்கு, குறிப்பாக குடிசை வாழ் மற்றும் நலிந்த மக்களுக்கும் தரமான முறையில் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் துணை மையங்களாக செயல்படும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதைப்போல மக்களது உடல் நலத்தில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. அந்த உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை ஏராளமாக அமல்படுத்துகிறோம்.

நல்வாழ்வுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக நமது மருத்துவர்கள் செயல்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி ஏழை எளியோரின் நம்பிக்கையாக இருக்கிறதோ, அதைப் போலவே நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் செயல்பட வேண்டும்.

இன்று 500 மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே வரும் என்பதில் ஐயமில்லை. வாழ்விடத்துக்கு அருகிலேயே பள்ளிகள் இருப்பதைப் போல, அருகிலேயே மருத்துவமனைகள், நிரந்தர மருத்துவ மையங்கள் என்ற சூழலை நிச்சயமாக விரைவில் உருவாக்குவோம். அதை மக்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் நடைமுறையில் 'பள்ளிக்கல்வி இயக்குனர்' பதவி; முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.