ETV Bharat / state

மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவாகத் தொடங்க பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் - CM MK Stalin sent letter to PM MODI

மதுரை
மு.க ஸ்டாலின்
author img

By

Published : Jun 5, 2021, 12:54 PM IST

Updated : Jun 5, 2021, 1:35 PM IST

12:50 June 05

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் அமைக்கும் பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "மதுரையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக கடந்த 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கானப் பணிகள் தொடங்கப்படவில்லை. 

எனவே, இப்பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jun 5, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.