ETV Bharat / state

பாராலிம்பிக் போட்டியில் வென்ற மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி ஊக்கத் தொகை!

author img

By

Published : Oct 7, 2021, 3:14 PM IST

பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள், பட்டங்களை வென்ற தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார்.

பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

சென்னை: பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள், பட்டங்களை வென்ற 15 தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ. 3.98 கோடியை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.10) வழங்கினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டது.

ரூ. 3.98 கோடி ஊக்கத்தொகை

2020ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், வி.ஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது. அவர்களது பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ. 12 லட்சம் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டது.

மேலும் 2020ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வி.எஸ். ரத்தன்வேல் மற்றும் மு. பிரனேஷ், 2021ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை

மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முன்மாதிரி

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், "விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் தமிழ்நாடு வீரர்கள் அதிகம் பேர் பங்கேற்பார்க்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு வீரர்கள் வெளிநாடு சென்று பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

அரசு நல்ல முறையில் ஊக்குவிப்பு

தொடர்ந்து பேசிய மாரியப்பன், "தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களை அரசு நல்ல முறையில் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், "இந்த உதவி விளையாட்டு வீரர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக இருக்கும். அதிக விளையாட்டு வீரர்கள் உருவாக வாய்ப்பாக அமையும் " என்றார்.

இதையும் படிங்க: 'வேலூரில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்க'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.