சென்னை: தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு, 'பொங்கலோ.. பொங்கலோ' என மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினார். பின்னர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் கலந்துகொண்டனர். அதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 'வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் விஜய்க்கு கார் பரிசு!