சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் இன்று(அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ. 5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ. 1 லட்சமும் #CMRF (முதலமைச்சர் நிவாரண நிதி) நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு