சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 03) பாரத் பயோ டெக் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், கூடிய விரைவில் உற்பத்தி தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டன.
மேலும் ஆக்சிஜன், தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் , பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சுஜித்ரா இலா, செயல் இயக்குநர் சாய் பிரசாத், தொழில்துறை சிறப்பு செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.