சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் , 36 ஆயிரம் பேருக்கு காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலை தா. வேலு, எழிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சிறப்பானது என்றும், இதன் மூலம் ஏராளமானோர் பயனடைவார்கள் என தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம்!