இந்தியா - சீனா நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாடு வரவுள்ள தலைவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சீனா நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும் சீனக் குடியரசு தலைவர் ஜி ஜின்பிங்கும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை புரியவுள்ளனர்.
மாமல்லபுரத்தில் இவர்களது பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டு, இருநாட்டுத் தலைவர்களையும் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:'பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது'