ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: முதலமைச்சர் நிவாரண நிதி ரூ. 79,74,61,424

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் (ரூ. 79,74,61,424) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

cm_ announcement_
cm_ announcement_
author img

By

Published : Apr 8, 2020, 6:34 PM IST

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும், முதலமைச்சரின் வேண்டுகோளின் படி, பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்தது இதுவரை பெற்ற மொத்த தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும்.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு:

 பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய்

 கவின் கேர் நிறுவனம் ரூ. 1 கோடி

 டெல்பி டி வி எஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ. 1 கோடி

 டைட்டன் நிறுவனம் ரூ. 1 கோடி

 எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனம் ரூ. 1 கோடி

 லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனம் ரூ. 1 கோடி

 தமிழ்நாடு எஜுகேசனல் அன்ட் மெடிக்கல் டிரஸ்ட் ரூ. 30 லட்சம்

 ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் ரூ. 25 லட்சம்

 TAGROS கெமிக்கல் இந்தியா நிறுவனம் ரூ. 25 லட்சம்

 TAG கார்ப்பரேசன் ரூ. 20 லட்சம்

 அம்மா சாரிட்டபில் டிரஸ்ட் ரூ. 11 லட்சம்

 ஹெரிட்டேஜ் புட்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சாப்டீயோன் இந்தியா,

வெங்கடலெட்சுமி பேப்பர் அன்ட் போர்டு, டிடிகே கன்ஷ்டிரக்சன்,

ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், திருமதி சுதா ரகுநாதனின் சமுதாயா

பவுண்டேஷன், ஆகிய நிறுவனங்கள் தலா ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளனர்

மேல் குறிப்பிட்டுள்ள நான்கு நாட்களில் மட்டும் நிவாரண நிதியாக கிடைக்க பெற்ற மொத்த தொகை 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் (ரூ.17,44,41,886) ஆகும்.

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு நிதியளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.