ETV Bharat / state

'சிறுதுளி பெருவெள்ளம்' - ஒவ்வொருவரும் கரோனா நிவாரண நிதி அளிக்க முதலமைச்சர் வேண்டுகோள் - corona virus fund

சென்னை: 'சிறு துளி பெரு வெள்ளம்' என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே, இப்பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் கரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Apr 8, 2020, 3:04 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவருகின்றது. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு நிதி உதவி, அத்தியாவசிப் பொருள்களை விலையில்லாமல் வழங்கியுள்ளது.

ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரைப் பாதுகாக்கும் பொருட்டு நிவாரணம் வழங்கியும், தங்குமிடம், உணவு, மருத்துவம் ஆகிய வசதிகள் செய்துதரப்பட்டும் உள்ளன.

மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தன்னலம் பாராமல் கரோனா ஒழிப்புப் பணிகளில் களப்பணியும், மருத்துவப் பணியும் ஆற்றிவருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படுகின்றன. கரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று பலர் மனமுவந்து தங்களது பங்களிப்பினை தாராளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகிறார்கள். சிறுவர், சிறுமியர், மாணாக்கர் தங்களால் இயன்ற சிறிய பங்களிப்பை பெரிய மனதுடன் வழங்கி தங்களது கருணை உள்ளத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

கரோனா தொற்றினைத் திடமாக எதிர்கொண்டு சமாளிக்க, வருங்காலங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இந்நடவடிக்கைகளை செம்மையாகச் செய்ய, தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசு நாடுகிறது

‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே, இப்பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும். கரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான நன்கொடைகளை மின்னணு மூலம் பின்வருமாறு வழங்கலாம்:

i. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாகக் கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.

https://ereceipt.tn.gov.in/cmprf.html

ii. எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் [Electronic Clearing System (ECS)] மூலமாகக் கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை - தலைமைச் செயலகம், சென்னை – 600 009

சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு (IFS CODE) - IOBA0001172

சி.எம்.பி.ஆர்.எஃப். பான் (CMPRF PAN) - AAAGC0038F

மேற்கண்ட ECS மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாகக் கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெயர்

செலுத்தும் தொகை

வங்கி மற்றும் கிளை

செலுத்தப்பட்ட தேதி

நிதி அனுப்பியதற்கான எண்

தங்களது முழுமையான முகவரி

மின்னஞ்சல் (இ-மெயில்) விவரம்,

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட ஸ்விப்ட் குறியீட்டைப் (swift code) பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOBAINBB001 Indian overseas Bank, central office, Chennai

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

கொரோனா நிவாரணத்திற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதி,

நிதித் துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் முகவரி dspaycell.findpt@tn.gov.in

நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ழு)இன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50இன் கீழ் விலக்களிக்கப்படும். (மத்திய உள் துறை அமைச்சக ஆணை எண்.F.NO.II/21022/94(1124)/2015-FCRA-III நாள் 22.12.2015.)

பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பிவைக்கப்படும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.