சென்னையில் தீபாவளிக்கு மறுநாள் மகாவீர் நிர்வான் தினத்தன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் கடைகளை மூட மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் 2020 நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு மூட வேண்டும்.
இதேபோல் ஆடு, மாடு இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்யக் கூடாது. மேலும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி களைகட்டிய ஆட்டுச்சந்தை