ETV Bharat / state

பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி - பொறியியல் முதலாண்டு

பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 25ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 11, 2021, 3:35 PM IST

சென்னை : பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 25ஆம் தேதி தொடங்கும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சென்ற ஆண்டுகளில் 21 ஆயிரமாக இருந்த நிலையில் இந்தாண்டு இதுவரை 31 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
10 சதவீத இடஒதுக்கீடு
இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்கும் நிலை இருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தில்
பயோடெக்னாலஜி படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்தப் பல்கலைக்கழகத்திலும் பின்பற்றப்படாது.
பயோடேக்னாலஜி படிப்புக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை வழங்க மத்திய உயர்கல்வி துறை அமைச்சகத்துக்கு முதல்வர் விரைவில் கடிதம் எழுத உள்ளார்.
மாணவர் சேர்க்கை
மத்திய அரசு உதவி தொகை வழங்கினாலும் வழங்காவிட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் படியே மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இதுவரை 5 ஆயிரத்து 970 பேர் சேர்ந்துள்ளனர்.

அடுத்த கட்ட கலந்தாய்வுகள் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

3,443 கௌரவ விரிவுரையாளர்கள்

இந்நிலையில் , தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த இட ஒதுக்கீட்டில் சேர கூடிய மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் , கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வரும் காலத்திலும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை.
பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 25ஆம் தேதி தொடங்கும். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3,443 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் என அறிவிதிருந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.