இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை (அக்.22) வெளியிடப்படும்.
மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டுமே இணையதளம் மூலம் விவரங்களை அறிய முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதி அறிவிப்பு