ETV Bharat / state

4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

author img

By

Published : Oct 14, 2021, 11:26 AM IST

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட மாநில சிறுவர்கள் நான்கு பேர் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டுவருவதை அறிந்த தொழிலாளர் நலத் துறையினர், அவர்களை மீட்டனர்.

குழந்தை தொழிலாளர்கள்  குழந்தை தொழிலாளர்கள் மீட்பு  நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு  சென்னையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  child labour rescue  child labour rescue in chennai  child labour
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தி, அவர்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர் நலத் துறை, சைல்டு லைன் அமைப்புக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை அருகே உள்ள கோமாதா நகர் பகுதியில் தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உமாதேவி, இணை ஆணையர்கள் மகாதேவன் வேல்முருகன், வருவாய்த் துறையினர், திருவொற்றியூர் காவல் துறையினர் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை ஆய்வுசெய்தனர்.

ஆய்வின்போது பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதுக்குள்பட்ட நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுவர்களை மீட்ட அலுவலர்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர். பின்னர் சென்னை காசிமேட்டில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: ஆந்திர இளைஞர்களிடம் 1.50 கோடி ரூபாய் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.