ETV Bharat / state

கத்தியைக் காட்டி மிரட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது! - Anakaputhur child abuse

சென்னை: பல்லாவரம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனகாபுத்தூர்  சென்னை செய்திகள்  கத்தியைக் காட்சி சிறுமிக்கு தொந்தரவு  Anakaputhur  Anakaputhur child abuse  அனகாபுத்தூர் சிறுமி பாலியல் தொந்தரவு
கத்தியை காட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
author img

By

Published : Jul 12, 2020, 12:10 PM IST

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்(30), கட்டுமானப் பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர், நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் போடவே, அதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.

அதைக்கண்ட சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். அப்போது, சாலையில் கிடந்த கல் தடுக்கி கீழே விழ, பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், சதீஷ்குமாரை மீட்டு பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சையளித்தனர்.

அதன்பின்னர் சங்கர் நகர் காவல் துறையினர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ்குமாரை ஒப்படைத்தனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: காணாமல்போன பாலிடெக்னிக் மாணவர் கடற்கரையில் சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.