சென்னை: மாநகரில் சுமார் 18,757 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன, இதில் 7 டிரான்ஸ்பார்மர்களுக்கு மட்டும் மின் விநியோகம் செல்லவில்லை என புகார் எழுந்த நிலையில், விரைவில் மின்விநியோகம் வழங்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
-
திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
— TN DIPR (@TNDIPRNEWS) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/2 pic.twitter.com/sFp1UxDCcL
">திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
— TN DIPR (@TNDIPRNEWS) December 8, 2023
1/2 pic.twitter.com/sFp1UxDCcLதிரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
— TN DIPR (@TNDIPRNEWS) December 8, 2023
1/2 pic.twitter.com/sFp1UxDCcL
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, "சென்னையில் ஓரிரு இடங்களைத் தவிர பெரும்பாலானப் பகுதிகளில் மின் விநியோகம் சீராகி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளான மண்டலம் 6-10 வரை 100% சதவீதம் மின் விநியோகம் உள்ளது.
வட சென்னையைப் பொருத்த வரை, சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. வியாசர்பாடி பகுதியில் ஓரிரு இடங்களில், மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள 18,757 டிரான்ஸ்பார்மர்ஸ் உள்ளன. இதில் 7 டிரான்ஸ்ஃபார்மர்ஸுக்கு மட்டும் மின் விநியோகம் செல்லவில்லை.
வெள்ளம் பாதித்தப் பகுதியான பள்ளிக்கரணைப் பகுதியில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இன்று (டிச. 8) இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும்.
பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து என்பது 100% சதவீதம் செல்லக்கூடிய வகையில் சீர் செய்யப்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர, எந்த பகுதியிலும் மின் விநியோக பிரச்சினை இல்லை.
மயிலாப்பூர் தபால் அலுவலகப் பகுதியில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழை நீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலானப் பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளன. வார்டு வாரியாக ஆய்வு செய்து தேங்கியுள்ளத் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரியை பொருத்தவரை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்" என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஞ்சல்துறையிலுள்ள கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு..!