ETV Bharat / state

மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை - மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
author img

By

Published : Jul 18, 2021, 5:21 PM IST

சென்னை: ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி (84), சிறு வயதிலேயே சமூக தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

ரோமன் கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சுவாமி, பெங்களூருவில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல், இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

பழங்குடியின மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த ஸ்டேன் சுவாமி

பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஜார்க்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மும்பையில் உடல் நலக்குறைவினால் ஜூலை 5ஆம் தேதி காலமானார்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

இதனிடையே இன்று (ஜூலை 18) லயோலா கல்லூரியில் வைக்கப்பட்ட, அவரது அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஸ்டேன் சுவாமி மரணம்: வருத்தம் தெரிவித்த ஐநா மனித உரிமை ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.