சென்னை : தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் அரசுத்துறை உயர் அலுவலர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் முதல் தமிழ்நாட்டில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் வணிக நிறுவனம்,உணவகங்களில் 50 விழக்காடு வாடிக்கையாளர்கள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும் தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. சென்னையில் ஒரு நாள் தொற்று 6 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று(ஜன.10) ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது, டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பது, பண்டிக்கை காலத்தில் கடை வீதிகளில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, பொதுப்போக்குவரத்திற்கு தடை, கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : Today Corono update: 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி!