ETV Bharat / state

யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்!

சென்னை: யானைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான அஜய் தேசாய் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஜய் தேசாய் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

author img

By

Published : Nov 21, 2020, 1:32 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல யானைகள் ஆர்வலரும் , ஆராய்ச்சியாளருமான அஜய் தேசாய் உடல் நலக் குறைவால் நேற்று ( நவ.20) காலமானார் என்ற செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

அஜய் தேசாய் சர்வதேச உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடர்பான மத்திய அரசின் சிறப்பு குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இவர் யானைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அஜய் தேசாய் தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம், களக்காடு, முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் யானைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இவர் யானைகள் குறித்த தகவல்களையும், ஆலோசனைகளையும் தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கியுள்ளர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தங்கம் தென்னரசு தாயார் மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.