ETV Bharat / state

இசை, கவின் கலைகளின் வளர்ச்சி குறித்த வரலாற்றுப் புத்தகத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்!

சென்னை: தமிழ், ஆங்கில மொழிகளில் ஒருங்கே தயாரிக்கப்பட்ட இசை மற்றும் கவின் கலைகளின் வளர்ச்சி, வரலாற்றுப் புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 23, 2021, 4:33 PM IST

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ், ஆங்கில மொழிகளில் ஒருங்கே தயாரிக்கப்பட்ட இசை, கவின் கலைகளின் வளர்ச்சி - ஒரு வரலாற்று பார்வை (Nurturing Music and Fine Arts - A Historical Perspective) நூலினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.23) வெளியிட்டார்.

கலைகளான இந்நூல், தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த நம் பண்டைய இசை, ஆடல், ஓவியம் மற்றும் சிற்பம் ஆகியவை குருகுலங்களில் போதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் கற்பிக்கப்பட்டு, தற்போது ஒரு பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கும் வரலாற்றினையும், சாதனைகளையும் விளக்குகிறது.

இந்நூலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ள பிற கல்லூரிகள் கலை நிறுவனங்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலை தென்னிந்திய இசை தொடர்பான நூல்களை எழுதிய வே. ஸ்ரீராம் ஆங்கிலத்திலும், அதன் தமிழாக்கத்தினை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிரமீளா குருமூர்த்தியும் எழுதியுள்ளனர்.

இதையும் படிங்க:ஏழு பேர் விடுதலை... விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.