ETV Bharat / state

18 மாவட்டங்களுக்கு 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம்: தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : May 26, 2021, 8:30 PM IST

சென்னை: சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், முறைப்படுத்தும் கருவிகள் உள்ளிட்டவை பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

18 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 10 லாரிகள் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கிடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே.26) தொடங்கி வைத்தார்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய முதலமைச்சர் முன்னதாக உத்தரவிட்டிருந்த நிலையில், சிப்காட் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் என மொத்தம் 40 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் இறக்குமதி செய்ய ஆணை வழங்கப்பட்டது.

இதுவரை, 515 உருளைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதோடு, 1,750 ஆக்சிஜன் ஒழுங்குப்படுத்தும் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதம் விரைவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 1,400 ஆக்சிஜன் உருளைகள் சிங்கப்பூரில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆக்சிஜன் உருளை கருவிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் 18 மாவட்டங்களுக்கு வழங்கி உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்: களத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.