ETV Bharat / state

'சொத்து வரியை மனமுவந்து உயர்த்தவில்லை'- மு.க. ஸ்டாலின்!

சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை, உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க வரி உயர்வு தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

tax hike  Property tax hike  sm stalin  stalin explained about tax hike  tn assembly  stalin speech in tamilnadu assembly  சொத்து வரி உயர்வு  வரி உயர்வு  தமிழ்நாடு சட்டப்பேரவை  வரி உயர்வு குறித்து பேசிய ஸ்டாலின்  சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு க ஸ்டாலின்
author img

By

Published : Apr 6, 2022, 3:09 PM IST

Updated : Apr 6, 2022, 5:27 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.6) சட்டப்பேரவையில், தொழில் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துண்ர்வு ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து சட்டபேரவை விதி 110இன் கீழ் உரையாற்றினார்.

அப்போது, “நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் உள்பட அனைவரும் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான் அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்பட்டது.

ஏனென்றால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில்கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

சொத்து வரி உயர்வு குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

அதை சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள், அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்.

ஆகவே, இந்த நிலையிலேதான் மக்களை பாதிக்காமல், குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் இதிலே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளைப் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை.

அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்பதுதான். எதிர்கட்சி மற்றும் எங்கள் தோழமைக் கட்சிகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்! மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மட்டுமின்றி, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களையும் கேட்டு, அமைகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2023 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின்

Last Updated : Apr 6, 2022, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.