ETV Bharat / state

பாஜக ஆளும் மாநிலங்கள் போல் தமிழகம் பற்றியா எரிகிறது? - ஆளுநர் பேச்சுக்கு முதலமைச்சர் பதிலடி! - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னைபல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்தார்.

Chief Minister Stalin
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : May 8, 2023, 8:06 AM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் பல்லாவரத்தில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது என்று எனக்கு தெரியும். பத்தாண்டு காலம் பாடு பட்டு கிடந்தது தமிழ்நாடு. ஐந்து ஆண்டு காலம் தன் மீது இருந்து வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் இருந்தார் அம்மையார் ஜெயலலிதா சிறைக்கு போனார் திரும்பி வந்தார? அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டார் மறைந்துபோனார்.

பழனிசாமி, சசிகலா, ஆகியோரின் உட்கட்சியின் பதவி போட்டியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் சீரழிந்தது ஊழல் முறை கேட்டின் காரணமாக தமிழகத்தை சூறையாடி சின்னாபின்னம் ஆக்கினார்கள். தூத்துக்குடியில் ஊர்வலமா துப்பாக்கியால் சுட்டுக்கொல், பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையா? குற்றவாளிகளை கைது செய்யாதே, அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு வீட்லேயே கொலை நடந்துச்சு, கொள்ளை நடந்துச்சு, மர்ம மரணங்கள் நடந்துச்சு" என்று கூறினார்.

ஆளுநர் பயப்படுகிறார்: தொடர்ந்து பேசிய அவர், திராவிடம் என்றால் காலாவதியான கொள்கை என்று சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு சொல்கிறேன் சனாதானத்தை வர்ணாசிரமத்தை மனுநீதியை காலாவதி ஆக்கியது திராவிடம். ஆரியத்தை எதிர்க்கின்ற சக்தி திராவிடத்திற்கு உண்டு. அந்நிய படையெடுப்பாக இருந்தாலும் ஆரியப் படையெடுப்பாக இருந்தாலும் அதை நிறுத்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால்தான் ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்.

ஆளுநர் அவர்களே பயப்பட தேவையில்லை. திராவிடம் என்பது காலவதியான கொள்கை அல்ல சனாதனத்தை மனுநீதியை காலாவதியாக்கியது திராவிடம். இன்னும் அழுத்தமாக சொல்கிறேன் ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்திற்கு தான் உள்ளது. அதனால்தான் ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்.திராவிடம் மாடல் என்பது எதையும் வெடிக்காது உருவாக்கும் எதையும் சிதைக்காது சீர் செய்யும் திராவிடம் மாடல் யாரையும் பிரிக்காது அனைவரையும் ஒன்று சேர்க்கும் திராவிட மாடல் யாரையும் சாய்க்காது சமமாக நடத்தும். அப்படிப்பட்ட திராவிட மாடலின் பயணம் ஏறுமுகத்தை சென்று கொண்டிருக்கிறது.

ஆளுநர் எதற்கு எதிர்கட்சி போல் பேச வேண்டும்: அதிமுக போன்ற எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை அவர்கள் அப்படித்தான் பேசியாக வேண்டும். ஆனால் அரசியல் உடைய அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் இதற்கு எதிர்கட்சி போல் பேச வேண்டும். எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாநிலத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அமைதியை குறைக்க வந்திருக்கிறாரா ஆளுநர் என்பதுதான் மக்களின் சந்தேகங்களாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆங்கில நாளேட்டுக்கு ஆளுநர் அளித்துள்ள பேட்டியில் கழக அரசு மீது பல்வேறு அவதூறான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார். அதே பேட்டியில், முதலமைச்சர் நல்ல மனிதர் என்றும், என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும், நானும் அவரிடம் அன்பாக நடந்து கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலம் போல் தமிழகம் பற்றி எரிகிறதா: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்று ஆளுநர் அவர்கள் சொல்லி இருக்கிறார். "மிஸ்ட்டர் ஆர்.என்.ரவி அவர்களே.. பாஜக ஆளுகிற மணிப்பூர் மாநிலம் இதோ பற்றி எரிகிறதே; அது போல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? என்ன பேசுகிறார் ஆளுநர்? சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் கலவரம் நடந்ததே? அது பாஜக ஆளும் மாநிலம் அல்லவா? அதுபோல இங்கு நடந்ததா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.