இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. பின்னர் மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மோடி தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
தற்போது சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பொதுத்தேர்வு ரத்துசெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன் பின்னர் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பை எதிர்பார்த்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' - பள்ளிக் கல்வித் துறைக்கு அலுவலர் நியமனம்