ETV Bharat / state

ஜன.25இல் முதலமைச்சர் - சிறுபான்மையின சமூகத் தலைவர்கள் சந்திப்பு

author img

By

Published : Jan 8, 2020, 9:25 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை முதலமைச்சர் பழனிசாமி ஜன. 25ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார்.

Chief Minister meets minority community leaders on Jan. 25

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் எதிரொலித்தது.

இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் இருவரும் எடுத்துக் கூறினர்.

மேலும் சிறுபான்மையின சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு ஒப்புதல் அளித்த முதலமைச்சர் ஜன. 25ஆம் தேதி அன்று சிறுபான்மையின சமூகத் தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைப்பு!

Intro:Body:குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சிறுபான்மையின சமூக தலைவர்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தில் முஸ்லிம் மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது குடியுரிமை சட்டம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து சிறுபான்மை இன சமூக தலைவர்களை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கூறினார். அதற்கு ஒத்துக்கொண்ட முதல்வர் வரும் 25-ஆம் தேதி அன்று சிறுபான்மையின சமூக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார். மேலும் சிறுபான்மையின சமூக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.