சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான 2 விடுதி கட்டடங்களை நேற்று (டிசம்பர் 29) திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் - வேப்பேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் -அயனம்பாக்கம் ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான 2 விடுதி கட்டடங்களை திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம் - வேப்பேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிருக்கான 2 விடுதி கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த விடுதி கட்டடங்கள் தலா 13 அறைகள், காப்பாளர் அறை, நவீன குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலர் சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உங்கள் கட்டளைகளை நிறைவேற்றவே நான் உள்ளேன்- உணரச்சிப்பூர்வமடைந்த எடப்பாடி