ETV Bharat / state

'எம்ஜிஆர் சிலை அவமதிப்பு, காட்டுமிராண்டித்தனமானது'- முதலமைச்சர் கடும் கண்டனம்! - புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிப்பு

சென்னை: புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

chief-minister-edappadi-palaniswamy
chief-minister-edappadi-palaniswamy
author img

By

Published : Jul 24, 2020, 4:30 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் மற்றவர் மனங்களை காயப்படுத்துவது கண்டிக்கதக்கது. ஓட்டு அரசியலை பிழைப்பிற்கு திட்டமிடுவதை தமிழினம் ஏற்காது.

ஆண்டுகள் கரைந்தாலும் சாதி, மதங்கள் கடந்து சமத்துவத்தின் அடையாளமாக இன்றளவும் ஏழை, எளியோரது உள்ளத்தில் வீற்றிருக்கும் தன்னிகரில்லா தலைவர் பாரத ரத்னா மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தி உள்ளனர்.

அக்கொடுஞ்செயல் புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.

இந்தக் காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலமாக சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது உள்ளிட்ட இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

உயரிய கொள்கை என்பது மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும். எம்ஜிஆர் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களை பின்னாலிருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு சட்டத்தின் முன் தோலுரித்து காட்டிட கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி முதலமைச்சரை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலை அவமதிப்பு - அதிமுகவினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.