ETV Bharat / state

சட்டப்பேரவையில் வ.உ.சி உள்ளிட்ட 3 தலைவர்களின் படத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்! - Chennai District latest News

சென்னை: டாக்டர் பி. சுப்பராயன், ஓ.பி. இராமசாமி ரெட்டியார், வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் படங்களை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Assembly
சட்டப்பேரவை
author img

By

Published : Feb 24, 2021, 10:35 AM IST

நாட்டுக்காக உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்கள் திறக்கப்படும் என கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கரோனா ஆய்வு கூட்டத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த மூவரின் படங்கள் திறக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள 12 தலைவர்களின் படங்கள் எப்போது திறக்கப்பட்டது, யாரால் திறந்து வைக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

* 1948ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் உருவப் படம் திறக்கப்பட்டது.

* இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதனை அப்போது நாட்டின் பிரதமராக இருந்த ஜவாஹா்லால் நேரு திறந்துவைத்தார்.

* இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1964-ஆம் ஆண்டு மாா்ச் 22-இல் திருவள்ளுவரின் படத்தை குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீா் ஹுசேன் திறந்தாா்.

* இதன் பின் சி.என்.அண்ணாதுரையின் உருவப் படத்தை 1969 பிப்.10-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்தாா்.

* இதன்பின், அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆா்., முதலமைச்சராக இருந்த போது ஐந்து தலைவா்களின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.

* முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப் படத்தை 1977 ஆக.18-இல் அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தாா்.

* இதைத்தொடா்ந்து, தந்தை பெரியாா், அம்பேத்கா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் உருவப் படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆக.9-இல் திறக்கப்பட்டது. இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம் திறந்தாா்.

* இதன் பின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், 1992 ஜன.31-இல் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவப் படத்தை பேரவையில் வைத்து, அவரே திறக்கவும் செய்தாா்.

* இதன் பின் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் 2018 பிப்.11-இல் திறந்து வைக்கப்பட்டது.

* இதைத்தொடா்ந்து, ராமசாமி படையாட்சியாரின் முழு உருவப் படத்தை கடந்த ஆண்டு ஜூலை 19-இல் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தாா்.

* அதன் பிறகு தற்பொழுது நேற்று (பிப்.23) தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் டாக்டர் பி. சுப்பராயன், ஓ.பி. இராமசாமி ரெட்டியார், வ.உ. சிதம்பரனார் ஆகியோரது படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

* வ.உ.சிதம்பரம் படத்திற்கு கீழ் கப்பலோட்டிய தமிழன் என்று எழுதப்பட்டுள்ளது. டாக்டர் P.சுப்பராயன் படத்திற்கு கீழ் நேர்மை, எளிமை, தூய்மை என்று எழுதப்பட்டுள்ளது.

* ஓமந்தூரார் ராமசாமிரெட்டியர் படத்திற்கு கீழ் பெருந்தன்மை, பேதமின்மை, பேராண்மை என்று எழுதப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் முனைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.