ETV Bharat / state

தேசிய தன்னார்வ ரத்த தான நாள்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

தன்னார்வலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 500 அலகுகள் ரத்தத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் அலகுகள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் வாழ்த்து
author img

By

Published : Sep 30, 2020, 10:05 PM IST

சென்னை: ரத்த தானத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரம் அலகுகள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் நாளை (அக்டோபர் 1) வரவுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் மூலம் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றும் ரத்த தானத்தின் அவசியம் குறித்தும், ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ ரத்த தானம் செய்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்” என்பதாகும்.

தமிழ்நாடு அரசு, அரசு ரத்த வங்கிகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசு ரத்த வங்கி, தன்னார்வ ரத்த கொடையாளர்களை இணைத்திடும் வகையில் சமூக ஊடக முகநூல் உருவாக்கியது, ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளுக்கு எடுத்துச்செல்ல 10 அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ரத்த தான ஊர்திகள் வழங்கியது, 5 அரசு ரத்த வங்கிகளுக்கு ரத்த பரிமாற்றம் மூலம் பரவும் நோய்களை பரிசோதனை செய்திட நவீன தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் வழங்கியது, அரசு ரத்த வங்கிகளுக்கு 107 ரத்த வங்கி குளிர்சாதன பெட்டிகள் வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.

மேலும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திவருகிறது.

அத்துடன் ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், அரசு ரத்த வங்கி ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்துவருகிறார்கள்.

கரோனா தொற்று காலகட்டங்களில் தொடர் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், கரோனா தொற்று தன்னார்வலர்களிடமிருந்து ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 500 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 74 ஆயிரம் அலகுகள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிவருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை எய்திட மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்திட ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ரத்த தானம் செய்திடுவோம்! மனிதநேயத்தைக் காத்திடுவோம்!" என்றார்.

இதையும் படிங்க: சிதிலமடைந்து கிடக்கும் ஆங்கிலேயர் காலத்து தடுப்பணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.