ETV Bharat / state

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி மறைவு - முதலமைச்சர் இரங்கல்

author img

By

Published : Aug 2, 2020, 12:55 AM IST

சென்னை: திருவாரூரைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தியின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chief Minister condoles for Border Security Force Havildar

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிவந்த, திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை,173ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி ஜூலை 25ஆம் தேதி எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக், சிகிச்சை பலனின்றி ஜூலை 31ஆம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஹவில்தார் திருமூர்த்தி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.