தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பறக்கும் தேர்தல் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறாக சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 406.78 கோடி ரூபாய் மதிப்பில் பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ரொக்கமாக ரூ. 206.27 கோடி, ரூ.3.29 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.172 கோடி மதிப்புள்ள 521 கிலோ தங்கம், ரூ.2.93 கோடி மதிப்புள்ள 662 கிலோ வெள்ளி என மொத்தம் 406.78 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.