ETV Bharat / state

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: சத்யபிரதா சாஹூ

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சத்யபிரதா சாஹூ உத்தரவு
author img

By

Published : Mar 18, 2019, 7:13 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி சீரான முறையில் தேர்தலை நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 7 ஆயிரத்து 316 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

*சென்னை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பு*

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையான முறையில் நடைமுறை படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையாளர்கள் (அ) கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி சீரான முறையில் தேர்தலை நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் பணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்டறியப்பட்டுள்ள 7 ஆயிரத்து 316 பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 67 ஆயிரம் காவல்துறையினரும் 34 ஆயிரம் காவல்துறை அல்லாதவர்களும் (ஊர் காவல்படை, முன்னாள் ராணுவத்தினர்) ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர், இவர்களை தவிர்த்து கூடுதல் பாதுகாப்பிற்காக 200 கம்பெனி ராணுவத்தினர் தேவை என தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கோரப்பட்டிருந்த நிலையில், இதுவரை 10 கம்பெனி துணைராணுவத்தினர்தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளுக்கு வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல், தேர்தல் செலவினங்களை கண்காணிக்க நாளை முதல் செலவின பார்வையாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைத்து செலவினங்களும் கணக்கிடப்படவுள்ளதாகவும் முறைகேடான பணப் பரிவர்த்தனையை தடுக்கவும் பறக்கும் படையினர் மூலம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலை முன்னிட்டு தலைமறைவு குற்றவாளிகள் 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து  பேசிய அவர், இதுவரை பொது இடங்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 206 ரூபாய் செலவிலும், தனியார் இடங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 159 ரூபாய் செலவிலும் அரசியல் விளம்பரங்கள் அகற்றப் பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் 26 ஆம் தேதி பொது பார்வையாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையை பொதுத்து எந்தெந்த தொகுதிகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு தேவை என்பது தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விசுவல் மோஜோவில் அனுப்பபட்டுள்ளது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.