ETV Bharat / state

அதிமுகவிற்கு நிலைப்பாடு என்று ஒன்று கிடையாது: ப.சிதம்பரம்!

author img

By

Published : Dec 23, 2019, 7:25 PM IST

சென்னை: அதிமுகவிற்கு நிலைப்பாடு என்று ஒன்று இல்லை, அவர்கள் பாஜகவின் ஆணையைப் பின்பற்றுகிறார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

pchidambaram-comments-about-caa-in-chennai

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''ஜார்கண்ட் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ள வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஜார்கண்ட் மாநில மக்கள் அளித்துள்ளனர்.

இன்று திமுக பேரணிக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றிகள். பாஜக தேர்தல் அறிக்கையில் தேசியக் குடியுரிமையை அமல்படுத்துவோம் என்று கூறியதை யாரும் மறுக்கவில்லை. பாஜக அமைச்சர்கள் பலர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று பேசியுள்ளனர். ஆனால் இதை ஏதும் பிரதமர் மோடி நாங்கள் பேசவே இல்லை என்று கூறுவது வருத்தமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.

குடியுரிமைச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இலங்கை, பர்மா போன்ற அண்டை நாடுகளை ஏன் சேர்க்கவில்லை. இஸ்லாமிய மதத்தை விட்டு ஆறு மதத்தை மட்டும் ஏன் சேர்த்துள்ளனர். இலங்கை ஹிந்துக்களும்கூட சேர்க்கப்படவில்லை. இந்த சட்டம் சம உரிமையை நிலைநாட்டவில்லை.

உலகில் மிகவும் நசுக்கப்படும் சிறுபான்மையான இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் அகமதியா, வங்கதேசம் ரோஹிங்கிய முஸ்லீம் போன்றவர்கள் இணைக்கப்படவில்லை.

புரட்சிகரமான சட்டம் கொண்டு வந்தது போல் பாஜக காட்டிக்கொள்கின்றது. இந்தியாவை ஒரு போதும் ஜெர்மனியாக மாற்ற நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மாணவர்கள் குரல் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் நெஞ்சில் ஈரம் உள்ளது. பிரதமர் மோடி உச்சானி கொம்பில் இருந்து இறங்கி வர வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து அதிமுக நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதற்கு, ''அதிமுக நிலைப்பாடு ஏதும் எடுக்கவில்லை. அவர்களுக்கு நிலைப்பாடு என்று ஒன்று கிடையாது. அவர்கள் பாஜக சொல்வதை பின்பற்றுவார்கள்'' என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், ''பொருளாதார பிரச்னையில் இருந்து திசைதிருப்ப காஷ்மீரில் சிறப்புச் சட்டம் 370 ரத்து, குடியுரிமைச் சட்டம் போன்றவையை பாஜக கொண்டு வருகின்றது. நாட்டின் முக்கிய பிரச்னையான பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்றவை பற்றி சிந்திக்காமல், மக்கள் பாஜகவை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆனால் ஆறு மாதம் காலத்தில் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் நான்கு சட்டங்களை கையில் வைத்துக்கொண்டு பிளவு ஏற்படுத்தி வருகின்றது

இதையும் படிங்க: ’பேரழிவை நோக்கிச் சென்ற பொருளாதாரத்தை நாங்கள் சரி செய்துள்ளோம்’ - பிரதமர் மோடி

Intro:Body:அதிமுகவிற்கு நிலைப்பாடு என்று ஒன்று கிடையாது, பாஜக ஆணையை பின்பற்றுபவர்கள் - சிதம்பரம் விமர்சனம்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஜார்க்கண்ட் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ள வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி நன்றிகளை தெரிவித்து கொள்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஜார்கண்ட் மாநில மக்கள் அளித்துள்ளனர் என தெரிவித்தார்.

இன்று திமுக பேரணிக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகள், அமைப்புகளுக்கும் நன்றிகள். பாஜக தேர்தல் அறிக்கையை தேசிய குடியுரிமையை அமல்படுத்துவோம் என்று கூறியதை யாரும் மறுக்கவில்லை. மேலும் பாஜக அமைச்சர்கள் பலர் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று பேசியுள்ளனர். ஆனால் இதை ஏதும் பிரதமர் மோடி நாங்கள் பேசவே இல்லை என்று கூறுவது வருத்தமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் குடியுரிமை சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இலங்கை, பர்மா போன்ற அண்டை நாடுகளை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமிய மதத்தை விட்டு ஆறு மதத்தை மட்டும் ஏன் சேர்த்துள்ளனர்.
ஏன் இலங்கை ஹிந்துக்கள் கூட சேர்க்கப்படவில்லை போன்ற கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக இந்த சட்டம் சம உரிமையை நிலைநாட்டவில்லை.

உலகில் மிகவும் நசுக்கப்படும் சிறுபான்மையான இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் அகமதியா, பங்களாதேஷ் ரோஹிங்கிய முஸ்லீம் போன்றவர்கள் இணைக்கப்படவில்லை.

தொடர்ந்து அவர் பேசுகையில், புரட்சிகரமான சட்டம் கொண்டு வந்தது போல் பாஜக காட்டி கொள்கின்றது.
இந்தியாவை ஒரு போதும் ஜெர்மானியாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாணவர்கள் குரல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நெஞ்சில் ஈரம் உள்ளது என தெரிவித்தார்.பிரதமர் மோடி உச்சானி கொம்பில் இருந்து இறங்கி வர வேண்டும்.

அதிமுக நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதற்கு, அதிமுக நிலைப்பாடு ஏதும் எடுக்கவில்லை. அவர்களுக்கு நிலைப்பாடு என்று ஒன்று கிடையாது. அவர்கள் பாஜக சொல்வதை பின்பற்றுவார்கள் என விமர்சித்தார்.

பொருளாதார பிரச்சனையில் இருந்து திசைதிருப்ப சட்டம் 370 ரத்து, குடியுரிமை சட்டம் போன்றவையை பாஜக கொண்டு வருகின்றது. நாட்டின் முக்கிய பிரச்சனையான பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவை பற்றி சிந்திக்காமல் மக்கள் பாஜகாவை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து ஆறு மாதம் காலத்தில் நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் நான்கு சட்டங்களை கையில் வைத்து கொண்டு பிளவு ஏற்படுத்தி வருகின்றது.

காங்கிரஸ் கட்சிதான் நாட்டை மதத்தால் பிளவுப்படுத்தியது என்று அமித்ஷாவின் கருத்தை பற்றிய கேள்விக்கு, அவர் அறியாமையில் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.