ETV Bharat / state

கரோனாவால் துவண்ட வண்டலூர் பூங்கா: இணையம் மூலம் பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள்

author img

By

Published : Jul 17, 2021, 2:24 PM IST

Updated : Jul 19, 2021, 2:23 PM IST

இந்தியாவில் பல உயிரியல் பூங்காக்கள் இருந்தாலும் சென்னையில் உள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா தனிச்சிறப்பு வாய்ந்தது. கரோனா தொற்று காலத்தில் இப்பூங்கா மூடப்பட்டுள்ளதால் வருவாய் குறைந்துள்ளது. இதனையடுத்து இணையம் வாயிலாக பூங்காவில் உள்ள விலங்குகளைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதுகுறித்த செய்தித் தொகுப்பு...

கரோனால் துவண்ட வண்டலூர் பூங்கா
கரோனால் துவண்ட வண்டலூர் பூங்கா

சென்னை: கரோனா பெருந்தொற்றால் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டு உள்ளது.

இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் பூங்காவின் அலுவலர்கள் பூங்காவில் உள்ள வன விலங்குகளை மக்கள் காணொளி காட்சி மூலமாக நேரலையில் பார்க்கலாம் என அறிவித்தனர். இதனையடுத்து இணையத்தில் விலங்குகளை பார்ப்போரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது என உயிரியல் பூங்கா அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் பூங்காவை இணையம் மூலம் பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள்
நமது ஈ டிவி பாரத்துக்கு கிடைத்த பிரத்யோக தகவல்படி இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை பூங்காவில் உள்ள வன விலங்குகளை 71 லட்சத்து 82 ஆயிரத்து 50 முறை மக்கள் நேரலை மூலம் பார்த்துள்ளனர்.

இதில் வெள்ளை புலிகளுடன், கருப்பு புலிக்குட்டிகளை 3 லட்சத்து 75 ஆயிரத்து 237 முறை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இணையதளத்தில் கண்டுகளித்துள்ளனர்.

வன உயிரினங்களுக்கு சிறப்பு குழு - வனத்துறை செயலர் உத்தரவு!

தமிழ்நாட்டில் எத்தனை வன விலங்கு உயிரியல் பூங்காக்கள் இருந்தாலும் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்து 382க்கும் மேற்பட்ட ஊர்வன, பறப்பன, இருவாழ்வின, பாலூட்டி உள்ளிட்ட உயிரினங்கள் இந்த பூங்காவில் வாழ்கின்றன.
இதுகுறித்து வன விலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி நம்மிடம் கூறுகையில், "சென்னையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காதான் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

இந்தப் பூங்காவில் அரியவகையான வன உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது இந்தப் பூங்கா பெரும்பாலான பார்வையாளர்களை ஈர்த்தாலும், இன்னும் பல வசதிகளை செய்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்.

குறிப்பாக பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும். இந்தப் பூங்காவை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும்" எனக் கூறினார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

பூங்காவின் துணை இயக்குனர் நாக சதீஷ் கிடிஜாலா கூறுகையில், "இந்தப் பூங்காவின் வளாகத்தில் 179 சிசிடிவி கேமராக்கள் இணைய வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வசதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டிருந்தாலும் கரோனா பேரிடர் காலத்தில் விலங்குகளை இணையத்தின் மூலம் பார்ப்பது பல மடங்கு அதிகமாகியுள்ளது. வெள்ளை புலிகள், சிங்கம், வங்கப் புலி, யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் அதிகமாக பார்த்து ரசித்துள்ளனர் என்பது நிதர்சன உண்மை எனக் கூறினார்.

"பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுக்க பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கரோனா பேரிடர் காலத்தில் பூங்கா மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வராத காரணத்தால் பூங்காவுக்கு போதுமான வருமானம் இல்லை.

இதனால் 'விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம்' மூலம் விலங்குகளை தத்தெடுக்க குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி தத்தெடுக்கலாம் என தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என மற்றொரு அலுவலர் கூறினார்.

விலங்குகளின் பெயர்கள், பார்வைகள்:

  • வெள்ளை புலி (குட்டிகளுடன்)- 3, 75,237
  • நாக பாம்பு- 3, 45,622
  • சிங்கம் - 3, 13,944
  • வங்க புலி - 2, 86,654
  • யானை - 2,77,129
  • காண்டாமிருகம் - 2, 74,651
  • வெள்ளை புலி -2,59,571
  • சிறுத்தைப்புலி- 2, 26,691
  • முதலை- 2, 09,322
  • நீர் யானை - 2,02,830
  • காட்டெருமை- 1,91,893
  • கரடி -1,84,813
  • சிங்கவால் குரங்கு -1,57,762
  • நீலகிரி மந்தி -1,23,739
  • சிம்பான்ஸீ - 38,196

Last Updated : Jul 19, 2021, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.