சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், சீரடி, நாசிக் ஆகிய இரண்டு இடங்களுக்கு செல்லும் இரண்டு விமான சேவைகளும்,அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வரும் இரண்டு விமானங்களும் என மொத்தம் 4 விமான சேவைகள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் நேற்று (அக்-31) ரத்து செய்யப்பட்டது.
இதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானமும், அதே விமானம் சீரடியிலிருந்து மாலையில் 4:50 க்கு புறப்பட்டு மாலை 6:40 க்கு சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் நேற்று இரவு 7:10க்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் செல்லும் தனியார் பயணிகள் விமானம் மற்றும் இரவு மணிக்கு 9.20 மணிக்கு நாசிக்கில் இருந்து புறப்பட்டு, இரவு 11 20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு புறப்பாடு விமானங்கள், இரண்டு வருகை விமானங்கள் உட்பட 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதற்கான காரணம் என்ன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்த போது, போதிய பயணிகள் இல்லாததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பயணிகள் விரும்பினால் மாற்று விமானங்களில் மூலமாக அனுப்பி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் யாரும் அவதிக்குள்ளாகவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க:நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் ஹிமாச்சல் எலெக்ஷனில் நேரில் சென்று வாக்களிக்க முடிவு!