ETV Bharat / state

நடுவானில் விமானத்தில் தீ விபத்து: 159 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்பிழைப்பு! - Fire destroys Chennai airport

சென்னை:சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 159 பயணிகள் உயிர் தப்பினர்.

Chennai Airport
author img

By

Published : Nov 1, 2019, 1:49 PM IST

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத்திற்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் வால் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்தது.

இதனால் அதிகாலை 2.20 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்து அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விமானத்திலிருந்த 154 பயணிகள், 5 விமான ஊழியா்கள் உள்பட 159 போ் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சென்னை விமான நிலையம்

அதன்பின், மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்கு குவைத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இறக்கையில் பழுது, நடுவானில் வட்டம், 123 பேர் உயிர்' - பரபரப்பான சென்னை விமான நிலையம்!

Intro: சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானத்தில் தீ விபத்துBody:சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத்திற்கு இன்று அதிகாலை 1.40க்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,விமானத்தின் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் வால் பகுதியில் புகை வந்ததால் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அதிகாலை 2.20க்கு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
விமானத்திலிருந்த 154 பயணிகள் 5 விமான ஊழியா்கள் உட்பட 159 போ் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.
அதன்பின்பு மாற்று விமானம் மூலம் பயணிகள் அதிகாலை 4.30 மணிக்கு குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இச்சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.