ETV Bharat / state

வேலை தருவதாக ஏமாற்றி, கத்தி முனையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு.. - chennai news

சென்னையில் கேட்டரிங் வேலை தருவதாக கல்லூரி மாணவனை விடுதிக்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது வழக்குப் பதிவு. பாலியல் தொந்தரவிலிருந்து தப்பித்து மாணவன் வெளியே ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வேலை தருவதாக ஏமாற்றி, கத்தி முனையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு

author img

By

Published : May 29, 2023, 3:50 PM IST

வேலை தருவதாக ஏமாற்றி, கத்தி முனையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு

சென்னை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 18 வயதுமிக்க மாணவன், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவன் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸ் வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டரிங் பணியின் போது சத்திய குமார் (வயது 40) என்பவரது அறிமுகம் கிடைத்து உள்ளது.

அப்போது சத்திய குமார் மாணவனைத் தன்னிடம் வேலைக்கு வருமாறு அழைத்ததுடன் அவரது செல்போன் எண்ணை வாங்கி சென்று உள்ளார். பின்னர் மாணவனை தினமும் கேட்டரிங் வேலைக்கு சத்திய குமார் அழைத்து செல்போனில் பாலியல் ரீதியாக பேசி வந்து உள்ளார். இதே போல் நேற்று முன்தினம் இரவு சத்திய குமார், மாணவனை தொடர்பு கொண்டு கேட்டரிங் வேலை ஒன்று வந்து உள்ளதாகவும், ஆகையால் பெரியமேடு பகுதிக்கு வருமாறு அழைத்து உள்ளார்.

பின், சத்திய குமார் அழைத்ததன் பேரில் அங்கு சென்று உள்ளார். பின்னர் சத்திய குமார் காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். ஆகையால் இன்று இரவு தன்னுடன் வந்து தங்கி கொள்ளுமாறு கூறி உள்ளார். பின், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்து உள்ளார். நள்ளிரவு மாணவன் தூங்கி கொண்டிருந்த போது சத்திய குமார் திடீரென அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இதனால் பயந்து போன மாணவன் கூச்சலிடவே சத்திய குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தப்பி சென்றார். உடனே மாணவன் சத்திய குமாரை துரத்தி சென்று விடுதி ஊழியரிடம் தெரிவித்து பிடிக்க முயன்ற போதும் தப்பிச் சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் இந்தச் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முன்னதாகவே சத்திய குமார் விடுதி அறையை புக் செய்து விட்டு, பிறகு 12.30 மணிக்கு மாணவனுடன் சத்திய குமார் விடுதிக்கு செல்வது பதிவாகி உள்ளது. பின்னர் அதிகாலை சிறுவன் தப்பித்து ஓடி வந்து லாட்ஜ் ஊழியரிடம் சத்திய குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து தெரிவிப்பதும் பதிவாகி உள்ளது. சிசிடிவி காட்சியை ஆதாரமாக எடுத்துக் கொண்டு பதிவான முக அடையாளங்களை வைத்து சத்தியகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: துப்பட்டா அணியாத பெண்களே டார்கெட்..! - சென்னையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.