நாட்டின் 72ஆவது குடியரசு தின விழா சென்னை மெரினா காமராஜர் சாலையிலுள்ள காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முப்படை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றும்போது இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவினர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
* வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம்-2021*
அரசு ஊழியர் பிரிவு
1, பா. முல்லை, உதவி ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி புலிவலம்,
2, பிரகாஷ், கால்நடை உதவி மருத்துவர் ஓசூர் வனச்சரகம்,
3, சுரேஷ், இரயில் வண்டி ஒட்டுநர்,
பொது மக்கள் பிரிவு
புகழேந்தின் - நீலகிரி மாவட்டம்.
*கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் -2021*
கே.ஏ. அப்துல் ஜப்பார்- கோயம்புத்தூர் மாவட்டம்.
*சி. நாராயண சாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது*
செல்வகுமார்-விருதுநகர் மாவட்டம்
* சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருதுகள்*
1,ஈரோடு துல்லிய பண்ணைய உற்பத்தியாளர் குழுமம்,
2, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமம்.
* வர்த்தக்கத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர்கள் குழுமங்களுக்கான
விருது*
1, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழுமம்
2, விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுமம்.
*காந்தியடிகள் காவர் பதக்கம்*
1, மகுடீஸ்வரி பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, புனித தோமையர், தெற்கு மண்டலம் சென்னை,
2, செல்வராஜு, காவல் உதவி ஆய்வாளர், சேலம் மண்டலம்
3, சண்முகநாதன், தலைமைக் காவலர்- விருதுநகர் மாவட்டம்
4, ராஐசேகரன், தலைமைக் காவலர், திருவண்ணாமலை
*சிறந்த காவல் நிலையங்கள்*
1, குமார், காவல்துறை ஆய்வாளர்- சேலம்
2, சந்திரசேகரன்,காவல்துறை ஆய்வாளர்- திருவண்ணாமலை
3, அஜூகுமார், காவல்துறை ஆய்வாளர்- சென்னை கோட்டூர்புரம்
இந்நிகழ்வில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும், தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை, ஆர்.பி.எப்., தீயணைப்பு படை வீரர்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் அணிவகுப்பும், சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூர் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய கலைநிகழ்ச்சிகள் பிரிவில் கர்நாடக மாநிலம் பாரம்பரிய நடனமான டொலு குனிதா நடன நிகழ்ச்சியும், தெலங்கானா மாநிலத்தின் பழங்குடி நடனமான லம்பாடி நடனமும், கேரளா மாநிலத்தின் திருவாதிரை களி நடன நிகழ்ச்சியும், மத்தியப்பிரதேசத்தின் பாரம்பரிய நடனமான பதாயி நடன நிகழ்ச்சியும், குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான ரத்வா நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வாகனங்கள் அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டன. இதில், தமிழ்நாடு காவல்துறை, மக்கள் நல்வாழ்வு துறை அலங்கார ஊர்தி வாகனம் முதல் பரிசும், இரண்டாம் பரிசை ஊரக வளர்ச்சித்துறை வாகனமும், மூன்றாம் பரிசை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறை வாகனங்கள் பெற்றன.
இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பேரவைத் தலைவர் தனபால், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.